Load Image
dinamalar telegram
Advertisement

ஊரணியில் ஆக்கிரமிப்பு

Tamil News
ADVERTISEMENT


ராமநாதபுரம்-மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை வலையர்வாடி ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வேதாளை அருகே வலையர்வாடியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊரணி இருந்தது. இங்குஇருந்து தண்ணீர் எடுத்து சென்று மாரியம்மன் கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஊரணியை தற்போது சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனை அகற்றக்கோரி ஊர் செயலாளர் நம்புராஜன் தலைமையில் 30க்கு மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால் நேர்முக உதவியாளர் (பொது) ேஷக் மன்சூரிடம் மனு அளித்தனர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement