Load Image
dinamalar telegram
Advertisement

விழா முடிந்தும் அகற்றப்படாத பிளக்ஸ் பேனர்கள்: அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் வீதிமீறல்

Tamil News
ADVERTISEMENT


ராமநாதபுரம்-அதிகாரிகளின் அலட்சியத்தால் ராமநாதபுரத்தில் பிளக்ஸ் பேனர்கள் அதிகரித்துள்ளதால் விபத்துக்கள் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம்ஆகிய இடங்களுக்கு முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு செல்கின்றனர்.

நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அரசியல் கட்சி கூட்டங்கள், இல்ல விழாக்கள் நடந்தால் நகர் பகுதியில் மட்டுமில்லாது, நெடுஞ்சாலையின் ஓரத்திலும் பேனர்கள் வைத்து கொடிகளை கட்டுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர், மரங்களையும் விட்டு வைப்பது இல்லை. அதிலும் விளம்பர பலகைகளை கட்டி தொங்கவிடுகின்றனர். ஏற்கனவே நகரில் ஆக்கிரமிப்புகளால்ரோடுகள் சுருங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு, வண்டிக்கார தெரு, மருத்துவமனை ரோடு, சாலைத்தெரு, அரண்மனை பகுதிகளில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கின்றனர்.

ராமேஸ்வரம்--ராமநாதபுரம் நெடுஞ்சாலை பட்டணம்காத்தான், பாரதிநகர் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள் கட்டுவதால் பாதசாரிகள் ரோட்டோரங்களில் நடக்க முடியாமலும், வாகன ஓட்டிகளும் விபத்துக்குஉள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி விழா முடிந்து 4 மாதங்களாகியும் அதற்காக பட்டணம்காத்தான் ஊராட்சி டி.பிளாக் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டின்வளைவுப்பகுதியில் வைத்த பிளக்ஸ் பேனர் இதுவரை அகற்றப்பாடமல் உள்ளது. இவற்றை பார்த்தும் பார்க்காதது போல அவ்வழியாக செல்லும் அதிகாரிகள் உள்ளனர்.

ஒருவேளை விபத்திற்குபிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். நகர், ஊரக பகுதிகளில் பிளக்ஸ் பேனர் அனுமதியின்றி வைப்பவர்கள், ரோட்டை ஆக்கிரமிப்பவர்கள் மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட வேண்டும்.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    டுபாக்கூர் மாடல்... செஸ் போட்டி நடத்துறேன்னுட்டு நாட்டை நாசம் பண்ணிட்டாங்க. உலக கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்கள் மைதானத்தை சுத்தப் படுத்துணாங்களாம். நம்ம ஆளுங்களும் இருக்காங்களே... வெறும் பிரியாணி மூட்டைகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement