விழிப்புணர்வு கருத்தரங்கு
விருதுநகர்--விருதுநகர் பள்ளிகளில் ஏ.என்.டி., அறக்கட்டளை சார்பில் குழந்தை பருவ புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் ஆங்கிலப்பள்ளி, சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் நடந்த கருத்தரங்கில் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜெயராஜசேகர் தலைமை வகித்து பேசினார்.
பொருளாளர் திருவேங்கடராமானுஜம், செயலாளர் பாண்டிச்செல்வி, உறுப்பினர் விமலா அசோக்குமார், லயன்ஸ் கிளப் தலவர் குமரவேல்ராஜன், செயலாளர் முத்துசங்கர், பொருளாளர் அம்மையப்பன் பங்கேற்றனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு லயன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!