Load Image
dinamalar telegram
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் கொசு கேந்திரமாக மாறும் மழைநீர் தேக்கம்

Tamil News
ADVERTISEMENT


விருதுநகர்,--விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு கொசு பண்ணையா இது எனும் அளவிற்கு காலி நிலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.

செப். 15ல் விருதுநகரின் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்ட முதல்வர் ஸ்டாலின் வந்தார். அப்போது மாவட்ட தொழில் மையம் செல்லும் வழியில் உள்ள கருவேலம் புதர்மண்டி கிடந்த காலியிடம் சுத்தம் செய்யப்பட்டது. இதில் வாகனங்கள் நிறுத்தி கொள்ள வசதியும் செய்யப்பட்டது.

இதற்கு பிறகு பெரிய அளவில் அப்பகுதி பயன்படாமல் இருந்து வந்தது. மேலும் அங்கு நீர் வெளியேறும் ஓடை எதுவும் இல்லை. இதனால் வடகிழக்கு பருவமழையில் பெய்த மழைநீர் முழுவதும் அப்பகுதியில் தேங்கி உள்ளது.

உள்ளாட்சிகள் எங்கிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்யும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் இது போல அரசு அலுவலகங்களில் மழைநீர் தேங்குவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

இப்பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதால் டெங்கு, மலேரியா கொசு உற்பத்தியாகும் அச்சம் உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகம் எங்கிலும் மழைநீர் முறையாக வெளியேற வழியில்லாத சூழல் உள்ளது. வடிகால்களை சீரமைத்து முறையாக தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement