Load Image
dinamalar telegram
Advertisement

2வது நாளாக  விடுப்பு போராட்டம்



விருதுநகர்--விருதுநகரில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று 2வது நாளாக ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டம் நடந்தது.

பணிச்சுமை, விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகளை கைவிடுவது, ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவது, 2017 அரசாணை படி கணினி ஆபரேட்டர்களை இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முன் தினமும், நேற்றும் விடுப்பு போராட்டம் நடந்தது.

நேற்று நடந்த போராட்டத்தில் ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட 651 பேர் பங்கேற்று விடுப்பு எடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி பணிகள் முடங்கி காணப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement