நவ. 26, 27ல் வாக்காளர் திருத்த முகாம்கள்
விருதுநகர்--கலெக்டர் மேகநாதரெட்டி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த நடவடிக்கைகள் நவ. 26, 27 ஆகிய இரு நாட்களுக்கு முகாம்கள் நடக்கிறது.
அருகில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று அலுவலரிடம் தேவையான சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
www.nsvp.in என்ற இணையதள முகவரியில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
2023 ஜன. 1 அன்றோ, அதற்கு முன்போ 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால், 2023 ஏப். 1, ஜூலை 1, அக். 1 ஆகிய அடுத்தடுத்த தகுதி நாட்களில் 18 வயதை பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்கள், புதிதாக பெயரை சேர்க்க விரும்பினால் அவர்களும் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!