Load Image
dinamalar telegram
Advertisement

இரும்பு திருடிய 4 பேர் கைது

கடலுார் : சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில், பச்சையாங்குப்பம் லட்சுமணன், 37; முத்துகுமரன், 37; துளசிதாஸ், 22; ஈச்சங்காடு பிரகாஷ், 32; ஆகியோர் மதில் சுவர் ஏறி குதித்துள்ளனர்.

ரூ. 32 ஆயிரத்து 250 மதிப்பிலான 650 கிலோ இரும்பு பொருட்களை திருடி கொண்டு தப்பியோடினர். இது, அங்குள்ள 'சிசி டிவி' கேமராவில் பதிவானது.

இதுகுறித்து தொழிற்சாலை மேலாளர் ராஜேந்திர பிரசாத் அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement