Load Image
dinamalar telegram
Advertisement

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி 28ம் தேதி துவக்கம்



புதுச்சேரி-புதுச்சேரியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி, ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 28 ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து மண்டல மற்றும் மாநில அறிவியல் கண்காட்சி தலைவர் சாய் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 28 ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.

இதில், புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகள் மற்றும் ஆசிரியர் படைப்புகள் இடம் பெறுகிறது.

அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் மீண்டும் வரும் 1ம் தேதி மற்றும் 2ம் தேதி நடக்கும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறும்.

இதனுடன், காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்திய மாணவர்களின் படைப்புகளும், ஆசிரியர் படைப்புகளும் இடம் பெறுகிறது.

இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி மற்றும் தேசிய கண்காட்சியில் இடம் பெறும்.

ஜீவனாந்தம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் கண்காட்சியினை பள்ளி மாணவர்கள் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும், பொதுமக்கள் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரையிலும் பார்வையிடலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement