Load Image
dinamalar telegram
Advertisement

எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

Tamil News
ADVERTISEMENT


அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று பகல் 12;00, மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டரில் 3 வாலிபர்கள் பக்தர்களை பார்த்து ஆபாசமாக திட்டியுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வளத்தி சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அந்த வாலிபர்களை கண்டித்தார்.

ஆத்திரமடைந்த வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து, தகராறு செய்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரித்ததில், மதுராந்தகம் தாலுகா அருங்குணத்தை சேர்ந்த மணி மகன் ரஞ்சித்குமார்,19, செஞ்சியை சேர்ந்த சிவகுமார் மகன் சதீஷ்குமார், 21, வளத்தியை சேர்ந்த குமார் மகன் தமிழ்வளவன், 20, என தெரியவந்தது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில், 3 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement