Load Image
dinamalar telegram
Advertisement

இருளர் மாணவி பலாத்காரம்: டிராக்டர் டிரைவருக்கு வலை



விழுப்புரம் : செஞ்சி அருகே இருளர் மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் மீது, விழுப்புரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பிளஸ் 1 படித்து வருகிறார்.

இவர், சில நாட்களாக உடல்நிலை பாதித்திருந்தார். பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவரை பரிசோதனை செய்தனர்.

அதில், அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

பெற்றோர் விசாரித்தில், கடந்த ஜூன் 6ம் தேதி, கணக்கன்குப்பத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் தமிழ்ச்செல்வன், 20; ஏரியில் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

இது குறித்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின் றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement