Load Image
dinamalar telegram
Advertisement

முயல் வேட்டையாடியவர் கைது; கள்ளத் துப்பாக்கி பறிமுதல்

Tamil News
ADVERTISEMENT


விழுப்புரம் : விழுப்புரம் அருகே முயல் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்து, கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் வன பாதுகாப்பு படை ரோந்து பிரிவினர் வனவர் ஜெயபால் தலைமையில், வனக்காப்பாளர்கள் சுப்ரமணி, தருமன், காவலர் செந்தில் ஆகியோர் நேற்று விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜானகிபுரம் பகுதியில் இருந்து வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், விழுப்புரம் ஆசாகுளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன், 50; என்பதும் இருவேல்பட்டு ஏரியில் கொக்கு மற்றும் முயல் வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.

மேலும், துப்பாக்கி உரிமம் வைத்துள்ள அவர் அந்த துப்பாக்கியை பயன்படுத்தாமல் கட்டை மற்றும் பைப்பால் தயாரிக்கப்பட்ட கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்த அவரை கைது செய்து, அவரிடமிருந்த கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement