Load Image
dinamalar telegram
Advertisement

வெளிநாட்டில் படிக்க வைப்பதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி,-வெளிநாட்டில் கல்லுாரியில் சேர்ப்பதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பிளவேந்திரன்,43; செக்யூரிட்டி. இவர், தனது மகனை வெளிநாட்டில் சிவில் இஞ்சினியிரிங் படிப்பில் சேர்க்க முடிவு செய்தார்.

இதற்காக, கடந்த 2020ம் ஆண்டு, பிள்ளை தோட்டம் தென்னஞ்சாலையில், வெளிநாட்டில் படிக்க மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தை அணுகினார்.

அப்போது, நிறுவனத்தின் உரிமையாளரான பூமியான்பேட்டை, ராகவேந்திரா நகரை சேர்ந்த பிரசாத்,42; வெளிநாட்டில் கல்லுாரியில் 'சீட்' வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் வாங்கினார்.

ஆனால், அதனபடி கல்லுாரியில் சீட் வாங்கி தரவில்லை. அதனால், பிளவேந்திரன் பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.5. 90 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை தராமல் காலம் கடத்தி வந்தார்.

இதுகுறித்து பிளவேந்திரன் நேற்று முன்தினம் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, பிளவேந்திரனிம் பணத்தை வாங்கி மோசடி செய்த பிரசாத்தை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement