Load Image
dinamalar telegram
Advertisement

நீரோட்டம் அதிகரிப்பு படகு தரைத்தட்டியது

Tamil News
ADVERTISEMENT


காரைக்கால்- -அரசலாற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட விசைப்படகு கடற்கரையில் தரைத்தட்டியது.

காரைக்கால் கீழகாசாக்குடிமேட்டை சேர்ந்தவர் சங்கர். இவரது விசைப்படகு, நேற்று முன்தினம் மாலை, மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்தார்.

நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்காக சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளும், மீன் பிடி துறைமுகத்திற்கு வந்தபோது, படகை காணவில்லை.

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், அரசலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததில், விசைப்படகு அடித்து செல்லப்பட்டு, கடற்கரையில் மணலில் சிக்கி தரைதட்டியிருந்தது தெரிய வந்தது.

தரைத்தட்டிய படகை மீனவர்கள், பிற விசைப்படகுகள் உதவியுடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

விசைப்படகு தரைத்தட்டியது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement