Load Image
dinamalar telegram
Advertisement

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை



வில்லியனூர்,-இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கணவர் மற்றும் மாமியாரை போலீசார் தேடிவருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா,38; இவர் புதுச்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். முருகன், இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் முருகனின் தாயார் சாரதாம்பாள், வெண்ணிலாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இது குறித்து வெண்ணிலா புதுச்சேரி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள், வெண்ணிலாவை கணவர் முருகனுடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டனர். ஆனால் சாரதாம்பாள் வெண்ணிலாவை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

அதனால், வெண்ணிலா வீட்டின் எதிரில் உள்ள காலி மனையில் கூரை அமைத்து மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

தனது தயார் சாரதாம்பாளுடன் வசித்து வரும் முருகன், விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சாரதாம்பாள் கடந்த 6ம் தேதி வேறு ஒரு பெண்ணை முருகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதனை தட்டிக்கேட்ட வெண்ணிலாவை, முருகன் மற்றும் சாரதாம்பாளும் தாக்கினர்.

இதுகுறித்து வெண்ணிலா, வில்லியனுார் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிந்து, முருகன் மற்றும் சாரதாம்பளை தேடிவருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement