Load Image
dinamalar telegram
Advertisement

போதை பொருட்களை தடுக்க கலெக்டர் தீவிர ஆலோசனை

Tamil News
ADVERTISEMENT


காரைக்கால்--காரைக்காலில் போதை பொருட்களை தடுத்திட, பள்ளி, கல்லுாரிகளை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் அறிவுருத்தினார்.

காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் கலெக்டர் முகமது மன்சூர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கர், எஸ்.பி.,சுப்ரமணியன் வேளாண் துணை இயக்குநர் செந்தில்குமார், நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாவதை தடுப்பது தொடர்பாக கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, மாணவர்களுக்கு எப்படி போதைப் பொருள் கிடைக்கிறது என்பதை ஆசிரியர்கள் ஆய்வு செய்யவும், போதைப் பொருள் நடமாட்டம் குறித்து கண்காணித்திட குழு அமைக்கவும், கல்வி நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டார். .

மேலும், போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு சாரா தொண்டு நிறுவனம் மூலம் கவுன்சிலிங் அளிக்க அறிவுறுத்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement