Load Image
Advertisement

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு 74.61சதவீதம்: தேர்தல் துறையின் முயற்சிக்கு கைமேல் பலன்

  வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு 74.61சதவீதம்:  தேர்தல் துறையின் முயற்சிக்கு கைமேல் பலன்
ADVERTISEMENT



வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் மற்றும் குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் இப்பணி கடந்த செப்.1 ம் தேதி துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 9,96,181 வாக்காளர்களில் இதுவரை 7 லட்சத்து 43ஆயிரத்து 268 பேர், தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து அசத்தியுள்ளனர். அதாவது, மொத்த வாக்காளர்களில் 74.61 சதவீத பேர் ஆதார் எண்ணை இணைத்து தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

புதுச்சேரி, மாகி, ஏனாம் ஆகிய மூன்று பிராந்தியங்களில் உள்ள 25 தொகுதிகளில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 56 பேர் ஆதார் எண்ணை வாக்காளர்கள் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.

அதாவது மொத்தமுள்ள 8,35,283 வாக்காளர்களில் 74.11 சதவீத வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடைன் இணைந்து தேர்தல் துறையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்

காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளில் மொத்தம் 1,60,897 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 77.20 சதவீதம் பேர் அதாவது 1,24,212 வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் 'பூத் லெவல்' அதிகாரிகள் வீடு வீடாக சென்று, 'பார்ம்-6பி' படிவத்தை விநியோகித்து வருகின்றனர். தகவல்களை பெற்று கருடா செயலி மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்த படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து அதிகபட்சமாக 7 லட்சத்து 11 ஆயிரத்து 830பேர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர். இதுமட்டுமின்றி வாக்காளர் செயலி மூலம் 19,345 பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

கிராமங்கள் டாப்



தேர்தல் துறையின் ஆதார் எண் இணைப்பு முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. அனைத்து தொகுதிகளை ஒப்பிடும்போது கிராமங்களில் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. பாகூர் தொகுதியில் மொத்தமுள்ள 28,232 வாக்காளர்களில் 25,874 பேர் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து டாப்பில் உள்ளனர்.

அதாவது பாகூர் தொகுதி வாக்காளர்களில் 91.65 சதவீத பேர் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைந்து துல்லியமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு பச்சை கொடிகாட்டியுள்ளனர்.

அடுத்து திருநள்ளார் தொகுதியில் 87.56 சதவீத வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.குறைந்தபட்சமாக ஊசுடு தொகுதி உள்ளது. இத்தொகுதியில் 57.99 சதவீத வாக்காளர் தான் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த 9ம் தேதி துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணி டிச.8 ம் தேதி வரை நடக்கிறது. இந்த வாய்ப்பினை கொண்டு, வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து தேர்தல் துறையின் 100 சதவீத துல்லிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாம்.

ஓட்டுச்சாவடி மையத்தில் பார்ம்-6பி' படிவத்தை வாக்காளர்கள் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ஆதார் எண்ணை குறிப்பிட்டு வழங்க வேண்டும். ஆதார் ஜெராக்ஸ் காப்பியை காட்டினால் போதும். 10 நிமிடங்களுக்குள்ளாக ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் எளிதாக இணைக்கப்பட்டு விடும். இதன் மூலம் தவறில்லாத, இரட்டை பதிவு இல்லாத துல்லியமான வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை உறுதி செய்யலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement