Load Image
Advertisement

வாகனங்கள் அபகரித்து விற்ற இருவர் கைது பயங்கரவாதிகளுடன் தொடர்பு? என்.ஐ.ஏ., விசாரணை

  வாகனங்கள் அபகரித்து விற்ற இருவர் கைது பயங்கரவாதிகளுடன் தொடர்பு? என்.ஐ.ஏ.,  விசாரணை
ADVERTISEMENT
உடுமலை:உடுமலையில், மோசடியாக, 16 வாகனங்களை அபகரித்து விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத செயல்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா, என போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, பாண்டியர் சந்தையை சேர்ந்த, ஜாபர் அலி, 43, அப்பாவு வீதியை சேர்ந்த, சதாம் உசேன், 30, ஆகியோர், காந்திநகரைச்சேர்ந்த, சரக்கு வாகன உரிமையாளரான, சக்தி கனகராஜிடம், வாகனங்களை பெரிய கம்பெனிகளுக்கு வாடகைக்கு விடலாம் என கூறி, இரண்டு வாகனங்களை பெற்று, மோசடியாக விற்றுள்ளனர்.

இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், உரிமையாளர்களிடமிருந்து, வாகனங்களை மோசடியாக பறித்தும், திருடியும், பலருக்கு விற்றதும், உடைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

என்.ஐ.ஏ., விசாரணை



போலீசார் கூறியதாவது:

உடுமலையை சேர்ந்த, ஜாபர்அலி, சதாம் உசேன் ஆகியோர், வாகனங்களை வாடகைக்கு பெற்றும், அவசர தேவை என வாங்கிச்சென்றும், திருடியும், எந்தவிதமான ஆவணங்கள் இல்லாமல் பலருக்கும் விற்று வந்துள்ளனர்.

ஒரு சில வாகனங்கள், பழைய இரும்புக்கு விற்றும் மோசடி செய்துள்ளனர். வாகனத்தை திருப்பி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுவரை, 16 வாகனங்கள் மோசடியாக பறித்துள்ளனர்.

கோவையில், கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால், என்.ஐ.ஏ., அதிகாரிகள், உடுமலை வந்து இவர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். இதனால், பயங்கரவாதிகளுக்கு வாகனங்கள் கொடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement