Load Image
dinamalar telegram
Advertisement

கோவை விடுதி உரிமையாளரிடம் மங்களூரு போலீசார் விசாரணை

கோவை;பயங்கரவாதி முகமது ஷாரிக் தங்கிய கோவை விடுதியின் உரிமையாளர், மேலாளரிடம் மங்களூரு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மங்களூருவில் கடந்த, 19ம் தேதி நடந்த குக்கர் குண்டு வெடிப்பு குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்புக்கு காரணமான முகமது ஷாரிக் கைது செய்யப்பட்டார்.

முகமது ஷாரிக் கோவையில் உள்ள, மதிமகிழ் வியன் அகம் என்ற விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். இதையடுத்து கோவை போலீசார் விடுதி உரிமையாளர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று கோவை வந்த மங்களூரு தனிப்படை போலீசார், விடுதி உரிமையாளர் காமராஜ், மேலாளர் முருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விடுதி வருகை பதிவேட்டையும் மங்களூரு போலீசார் கைப்பற்றினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement