Load Image
dinamalar telegram
Advertisement

பொருளாதார மந்த நிலை அடுத்த ஆண்டில் ஏற்படாது

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி :அடுத்த ஆண்டில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்பட சாத்தியமில்லை என, 'மூடிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.


முதலீட்டாளர் சேவையில் ஈடுபட்டுள்ள மூடிஸ் நிறுவனம், அதன் ஆய்வறிக்கை ஒன்றில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், அடுத்த ஆண்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.அத்துடன், இப்பகுதியில் உள்ள நாடுகள், அதிக வட்டி உயர்வு மற்றும் மெதுவான உலக வர்த்தக வளர்ச்சி ஆகிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.Latest Tamil News

இந்தியாவை பொறுத்தவரை, அடுத்த ஆண்டில் மெதுவான வளர்ச்சியை காணும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்தில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் உற்பத்தி திறன் ஆதாயங்கள் ஆகியவை, இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.


அத்துடன், ரிசர்வ் வங்கி, பணவீக்கம் காரணமாக 'ரெப்போ' வட்டியை 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்க கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.கடந்த ஆகஸ்டில், மூடிஸ் நிறுவனம், இந்தி யாவின் வளர்ச்சி நடப் பாண்டில் 8 சதவீதமாகவும்; அடுத்த ஆண்டில் 5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (7)

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    என்னது, பொருளாதார மந்தம் அடுத்த ஆண்டில் ஏற்படாதா? அப்போ இதுக்கெல்லாம் காரணம் மன்மோகன் சிங்த்தான் என்று உருட்டுவோம்ல? மந்தம் இன்னும் மோசமாகும்ன்னு செய்தி வந்தா இதுக்கெல்லாம் காரணம் மோடிதான்னு கூசாம உருட்டுவோம் ....

  • cxzczxz - chennai,இந்தியா

    G20 மூலம் உலக நாடுகள் அனைத்திற்கும் இந்தியாவில் கொள்ளையடிக்க மோடி வழிவகுக்கும் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம் . இவ்வளவு நாட்கள் அமேரிக்கா இங்கிலாந்துக்கு மட்டுமே முன்னுரிமை . இனி அனைவருக்கும் .

  • அப்புசாமி -

    இந்தியாவுலே பருவமழை 2015 லேருந்து நல்லா பெய்து வருவதாலே பொருளாதாரம் தொய்வில்லாமல் போய்க்கிட்டிருக்கு. மழை பொய்த்தால் பொருளாதாரம் அவுட்.

    • ஆரூர் ரங் -

      நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை - மூதுரை. ஆள்பவர்கள்🙏🙏 அப்படி.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    மொத்த ஐரோப்பாவும் அமைதியிழக்கும் பொழுது பொருளாதாரன் என்ற ஒன்று இருந்தால்த்தானே இழக்க... இந்தியா சுய பொருளாதாரத்திலேயே சமாளிக்கும்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இப்போது மட்டும் என்ன வாழுதாம் ???எங்கும் மந்தம் ,எதிலும் மந்தமான பொருளாதார நிலை . ஜி.எஸ்.ராஜன் சென்னை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement