Load Image
dinamalar telegram
Advertisement

சாலையை விரிவுபடுத்தியாச்சு சென்டர் மீடியன் என்னாச்சு

Tamil News
ADVERTISEMENT
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், புதிதாக அகலப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலை பகுதியில் 'சென்டர் மீடியன்' அமைக்காமல் விடுபட்டுள்ளதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி - பல்லடம் ரோடு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட போது, ரசக்காபாளையம் கிராமப்பகுதியை கடக்கும் ரோடு மட்டும் குறுகலாக விடப்பட்டது. இதனால், விபத்து அபாயம் பல மடங்கு அதிகரித்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, ராசக்காபாளையத்தில் இருந்த 'பாட்டில் நெக்' பகுதியை, நெடுஞ்சாலை துறை விரிவுபடுத்தியது. ஆனாலும், அப்பகுதியில் இதுவரை 'சென்டர் மீடியன்' அமைக்கப்படவில்லை. அதிகமான சரக்கு வாகன போக்குவரத்து மற்றும் விபத்துகள் நிறைந்த ரோட்டில், சென்டர் மீடியன் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் கூட, நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டுவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement