Load Image
dinamalar telegram
Advertisement

ஊரக வளர்ச்சி துறையினர் போராட்டம்

பொள்ளாச்சி:கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர், நேற்று இரண்டாம் நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களை நிரப்ப வேண்டும், முழு சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்திய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.

கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கமும் இதில் பங்கேற்றுள்ளது. மாவட்ட அளவில், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி அலுவலகம், கிணத்துக்கடவு உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்து, ஒட்டுமொத்தமாக, 256 ஊழியர்கள், நேற்று இரண்டாம் நாள் போராட்டத்தில் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement