Load Image
dinamalar telegram
Advertisement

பூட்டிய வீடுகளில் கைவரிசை; 5 பேர் கைது 58 பவுன் நகை பறிமுதல்

Tamil News
ADVERTISEMENT
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய ஐந்து பேரை, கிழக்கு போலீசார் கைது செய்து, 58 பவுன் நகையை மீட்டுள்ளனர்.

பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி, ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டினர்.

இதையடுத்து, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் பணியை துரிதப்படுத்தனர்.

அதில், ஈரோடு மாவட்டம், பவானி பஸ் ஸ்டாண்ட்டில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், துாத்துக்குடி திருவாரகம்பட்டியை சேர்ந்த மணி என்கிற பாலகிருஷ்ணன்,36, திருநெல்வேலி பாளையம்செட்டிக்குளத்தை சேர்ந்த அந்தோணி என்கிற அருவா பாண்டி,27, தென்காசி காலடியூரை சேர்ந்த மணிகண்டன்,28, பாவூர் சத்திரத்தை சேர்ந்த சேர்மன்துரை, 28, துாத்துக்குடி குலேசகரபட்டிணத்தை சேர்ந்த ஸ்ரீராமன்,38, ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

துாத்துக்குடி குலேசகரபட்டிணம் ஸ்ரீராமன், போக்சோ வழக்கில் கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது, சேர்மன் துரை, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்ரீராமன், பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்தார்.

பாலகிருஷ்ணன், சேர்மன்துரை சிறையில் இருந்து வெளியே வந்ததும், ஸ்ரீராமனை தொடர்பு கொண்டு, கேரளா சென்று சம்பவம் செய்யலாம் (திருட்டு) என அழைத்துள்ளனர். அதன்பின், பொள்ளாச்சி பகுதியிலேயே சம்பவம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர்.

மூன்று பேரும் சேர்ந்து பொள்ளாச்சி பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகள், தனியார் அலுவலகங்களில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.

சூளேஸ்வரன்பட்டி அருகே வீட்டில் திருடிய போது, பைக்கை விட்டுச் சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற பைக்கை வைத்து விசாரிக்கப்பட்டது. ஈரோடு பவானியில் அவர்கள் இருப்பது தெரிந்து, அங்கு சென்று மூன்று பேரை பிடித்தோம்.

சோதனைக்காக சென்ற போது, பாலகிருஷ்ணன் தங்கியிருந்த அறையில் இருந்த அருவாபாண்டி, மணிகண்டனை கைது செய்தோம். நகைகளை திருடியதும், அவற்றை விற்று கிடைக்கும் பணத்தை மது குடித்தும், ஸ்பாவுக்கு சென்றும் ஜாலியாக செலவு செய்துள்ளனர்.

அவர்கள் விற்பனை செய்த நகையில், சென்னையில், 37 பவுன்; சேலத்தில், 21 பவுன், என மொத்தம், 58 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீராமை தவிர, மற்ற நான்கு பேர் மீது பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான வழக்குகள் உள்ளன. ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement