Load Image
dinamalar telegram
Advertisement

யானைகளை காக்க ரயில் வழித்தடத்தை மாற்றுங்க! ரயில்வேக்கு மக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி:போத்தனுார் - பாலக்காடு ரயில் வழித்தடத்தில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இரவு நேரத்தில், 30 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதை விட, பொள்ளாச்சி வழித்தடத்தை பயன்படுத்தி, யானைகள் இறப்பை தடுக்கலாம், என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, மதுக்கரை வனப்பகுதி வழியாக கேரள மாநிலம் பாலக்காடுக்கு ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த வழித்தடத்தில் யானைகள் அடிக்கடி ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

இதை தடுக்க, கேரள மாநிலம் வாளையாறு முதல், கோவை மதுக்கரை வரையிலும் வனத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போத்தனுார் --- பாலக்காடு ரயில் வழித்தடத்தில், ரயில்களின் வேகம் அதிகமாக இருப்பதும், வனத்தினுள் ரயில்பாதையை ஒட்டி, நீர்நிலைகள் இருப்பதாலும், யானைகள் வந்து செல்வதும், வனத்துறையின் கண்காணிப்பில் தெரியவந்தது.

இதற்கிடையில், யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்ககோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கஞ்சிக்கோடு -- வாளையாறு வரையான வழித்தடத்தில், இரவு நேரங்களில், 30 கி.மீ., வேகத்தில், ரயில்களை இயக்க உத்தரவிட்டுள்ளது. இது, எந்த பலனும் அளிக்காது, என, விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியதாவது:

அடர்வனத்துக்குள், 30 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கும் போது, பயண நேரம் வழக்கத்தை காட்டிலும், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரிக்கும்.

குறிப்பிட்டுள்ள வேகத்தில் ரயிலை இயக்கினாலும், யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க முடியாது. இதற்கு மாற்றாக, இரவு நேரத்தில், போத்தனுார் -- பாலக்காடு ரயில் வழித்தடத்துக்கு பதில், போத்தனுார் --- பொள்ளாச்சி --- பாலக்காடு வழித்தடத்தை பயன்படுத்தலாம்.

இந்த வழியாக, ரயில்கள் செல்லும் போது, நேர விரயம் ஏற்படுவதை தடுப்பதுடன், யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்கலாம். மேலும், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதி மக்களுக்கும் பயன் தரும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (1)

  • Manikandan Sivalingam - delhi,இந்தியா

    யானைகளை....பாதுகாக்க....இதன்.... வழித்தடங்களில்.... செல்லும்.... ரயில்களை.... ரயில்வே..... மேம்பாலங்கள்....அமைத்திட.... வேண்டும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement