Load Image
dinamalar telegram
Advertisement

26, 27ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பெயர் சேர்க்கலாம்; ஆதார் இணைக்கலாம்

Tamil News
ADVERTISEMENT
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த, 9ம் தேதி, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்காளர் பெயர் சேர்க்க அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட, 269 ஓட்டுச்சாவடிகளில், நாளை, 26ம் தேதியும், நாளை மறுநாளும் முகாம்கள் நடக்கிறது. காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க படிவம் - 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, திருத்தத்துக்கு படிவம் - 8 மற்றும் தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் - 8ஏ வழங்கப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்றும் பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார் இணைப்பு



பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை முகாம் மற்றும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கமிஷனர் தாணுமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை முகாம் முறையாக நடத்தப்பட வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement