Load Image
dinamalar telegram
Advertisement

கவரிங் நகை மோசடி; பெண் கைது மோசடி கும்பலுக்கு போலீஸ் வலை

Tamil News
ADVERTISEMENT


திட்டக்குடி--ராமநத்தம் அருகே, கவரிங் நகையை அடமானம் வைத்து பணம் பெற முயன்ற பெண் சிக்கினார். அவரது பின்னணியில் உள்ள மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த கல்லுார் கிராமத்தில் மோதிலால், 38, என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று மாலை 4:00 மணிக்கு, இவரது கடைக்கு, சேலம் மாவட்டம், அன்னதானபட்டியைச் சேர்ந்த ரோஸ்லின், 56, என்பவர் நகை அடமானம் வைக்க வந்தார்.

பத்து கிராம் எடையுள்ள ஒரு ஜோடி தங்க முலாம் பூசிய வளையல்களை அடமானம் வைப்பதற்காக தந்தார். மோதிலால், நகையை சோதித்து பார்த்தபோது, தங்கமுலாம் பூசிய கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது. மோதிலால் மற்றும் அவரது நண்பர்கள், அப்பெண்ணை ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.

மோதிலால் அளித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து அப்பெண்ணை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், ரோஸ்லின் ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம், கொங்கராபாளையத்திலும், செப்டம்பர் மாதம், சிறுபாக்கத்தில் உள்ள அடகுக்கடையிலும் போலி நகைகளை வைத்து பணம் பெற்றுச் சென்றது தெரிந்தது.

சேலத்தை மையமாக வைத்து செயல்படும் திருட்டு கும்பல், சுற்றியுள்ள மாவட்டங்களில் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரிந்தது.

அந்த கும்பல், வயதான பெண்களை உள்ளூர் நபர் போல அடகுக் கடைகளுக்கு அனுப்பி, போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற வைப்பதும், நகையை அடமானம் வைக்கும் பெண்களுக்கு ஒரு நகைக்கு ஆயிரம் ரூபாய் கூலியாக தருவதும் தெரிந்தது.

ரோஸ்லினை நேற்று அழைத்து வந்த கும்பல், அவர் பிடிபட்டதும் அங்கிருந்து ஆம்னி வேனில் தப்பியுள்ளது.

மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement