Load Image
dinamalar telegram
Advertisement

கனிம வளத்துறையினர், போலீசார் அசட்டை குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

உடுமலை:உடுமலை பகுதிகளில் கனிம வள கொள்ளை, அபரிமிதமாக நடந்து வருவதாக, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.

இதில், விவசாயிகள் பேசியதாவது:

உடுமலை, பெதப்பம்பட்டியில், நீர் வழித்தடத்தில், கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகளை கொட்டுகின்றனர். உடுமலை பகுதிகளில், காட்டுப்பன்றிகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாய பணிக்கு வர தொழிலாளர்கள் தயங்குகின்றனர்.

குடிமங்கலத்தில், காட்டுப்பன்றிகளால், விவசாய பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. பன்றி தாக்கியதில், பெண் தொழிலாளி, காயமடைந்தார். பன்றிகள் வராமல் கட்டுப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில், பரவலாக கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. விவசாயத்தை சார்ந்துள்ள தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து அதிகளவு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது.

இதனால், விவசாயம் அழிந்து வருகிறது. குளம், குட்டை, ஓடைகள் என, நீர்நிலைகள் அனைத்தும் சிதைக்கப்படுகிறது. நிலத்தடிநீர், பல அடி ஆழத்திற்கு தோண்டப்படும் கல்குவாரிகள், மண் குவாரிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

மேலும், முறைகேடாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. செக்போஸ்ட்களை கடந்து, போலீசார், கனிமவள அதிகாரிகளுக்கு தெரியாமல், மாநிலம் விட்டு மாநிலம் கனிம வளம் எப்படி கடத்தப்படுகிறது என்கிற சந்தேகம் எழுகிறது.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக பராமரிக்காததால், கடந்தாண்டு இடை நிற்றல் அதிகரித்து, பிழி திறன் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. நடப்பு ஆண்டு, அரசிடமிருந்து கூடுதல் நிதி வாங்கி, ஆலையை முழுமையாக பராமரிக்க வேண்டும். அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்காலில் புதர் மண்டியுள்ளது. முட்புதர்களை அகற்றவேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement