Load Image
dinamalar telegram
Advertisement

கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள்...கரும்புகையை கக்குது!சூழல் மாசுபடும் பிரச்னைக்கு விடிவு பிறக்குமா?

Tamil News
ADVERTISEMENT
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து, கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் இருந்து, கரும்புகை அதிகளவு வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. வாகன ஓட்டுனர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

சூழல் மாசை கட்டுப்படுத்த 'பிஎஸ் 6' ரக வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், இதுபோன்ற அரசு பஸ்களுக்கும் ஒரு விடிவு பிறந்தால் சூழலை பாதுகாக்கலாம்.

பொள்ளாச்சியில் இருந்து கோவை, பழநி, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பராமரிப்பின்றி உள்ளன.

பயணியர் அமரும் இருக்கைகள் பராமரிப்பில்லை. இன்ஜின், கியர் பாக்ஸ் போன்ற வாகனங்கள், அடிக்கடி, 'மக்கர்' ஆகி ரோட்டில் நிற்கின்றன.

'டப்பா' பஸ்களில் பயணிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவது தொடர்கிறது. கிராமங்களுக்கு உரிய நேரத்துக்கு பஸ்கள் செல்லாவிட்டால், வேலைக்கு செல்வோர், மாணவர்கள் என பலரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்நிலையில், கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் இருந்து, அதிகளவு கரும்புகை வெளியேறுகிறது. இதனால், பின்தொடர்ந்து வரும் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

பொள்ளாச்சியில் இருந்து நெகமத்துக்கு, செங்குட்டுப்பாளையம், குள்ளக்காபாளையம் வழித்தடத்தில் இயக்கப்படும், வழித்தட எண்,33 அரசு பஸ் புகை கக்கியபடி பொள்ளாச்சி நோக்கி வந்தது.

பஸ்சின் பின்புறம் வந்த வாகன ஓட்டுனர்கள், கரும்புகையால் மிகுந்த சிரமப்பட்டனர்.

அதிகளவு புகையை கக்கிய பஸ்சால், அவ்வழியாக சென்றோர் அவதிப்பட்டனர். இதுபோன்று பராமரிப்பில்லாத பஸ்களால், பொதுமக்கள் அவதிப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் இருந்து வெளியேறும் கரும்புகையால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பஸ்சை பின்தொடர்ந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள், கரும்புகையை சுவாசிப்பதால், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற, பராமரிப்பில்லாத அரசு பஸ்களை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

ஆய்வு செய்கிறோம்



வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில், ''அரசு பஸ்கள் முறையாக ஆய்வு செய்து தகுதிச்சான்று வழங்கப்படுகிறது. கரும்புகை வெளியேறினால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பஸ்கள் முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. பஸ்சில் இருந்து கரும்புகை வருவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

அரசு மனசு வைக்குமா



அரசு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புகை மாசுவை கட்டுப்படுத்த, 'பிஎஸ் 6' ரக இன்ஜின்கள் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. தற்போது வரும் வாகனங்களில், 'பிஎஸ் 6' முறையே பின்பற்றப்படுகிறது.

இதில், சூழலை மாசுப்படுத்தாத வகையில் இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களும், தற்போது மக்கள் பயன்பாட்டில் அதிகளவு உள்ளன.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்த, அரசு பஸ்கள் பரிதாப நிலைக்கு மாறியுள்ளன.

அரசு, மற்ற வாகனங்களில் கட்டுப்பாடு விதிக்கும் சூழலில், அரசு பஸ்களையும் மாற்றி புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால், இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அரசு மனசு வைக்க வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

அரசு மனசு வைக்க வேண்டும்!

அரசு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புகை மாசுவை கட்டுப்படுத்த, 'பிஎஸ் 6' ரக இன்ஜின்கள் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. தற்போது வரும் வாகனங்களில், 'பிஎஸ் 6' முறையே பின்பற்றப்படுகிறது. இதில், சூழலை மாசுப்படுத்தாத வகையில் இந்த வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களும், தற்போது மக்கள் பயன்பாட்டில் அதிகளவு உள்ளன.இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்த, அரசு பஸ்கள் பரிதாப நிலைக்கு மாறியுள்ளன. அரசு, மற்ற வாகனங்களில் கட்டுப்பாடு விதிக்கும் சூழலில், அரசு பஸ்களையும் மாற்றி புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால், இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அரசு மனசு வைக்க வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement