ADVERTISEMENT
திருப்பூர்:குப்பை அகற்றும் பணிக்கு சென்ற மாநகராட்சி வாகனம் ரோட்டில் சேற்றில் சிக்கியது.
திருப்பூர் மாநகராட்சி, 2வது வார்டில் சக்தி நகர் உள்ளது. அப்பகுதியிலுள்ள அண்ணமார் கோவில் செல்லும் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டத்துக்கும், குடிநீர் திட்டத்துக்கும் குழிகள் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது.இதனால், ரோடு முழுவதும் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ரோடு பல இடங்களில் சேறும் சகதியுமாக மாறியது. நேற்று பகல் 1:00 மணியளவில் அந்த ரோட்டில் குப்பை கழிவுகளை ஏற்றி சென்ற மாநகராட்சி லாரி சேற்றில் சிக்கியது.
பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் போராடி லாரி மீட்கப்பட்டது. இதேபோல், நேற்று முன்தினம் பனியன் நிறுவன சரக்கு வாகனம் ஒன்று இதே இடத்தில், சேற்றில் சிக்கியது. சில நாட்களுக்கு முன், ஏழு வாகனங்கள் சேற்றில் சிக்கி கொண்டது.
இவ்வாறு பல வாகனங்கள் சேற்றில் சிக்கியும், அந்த ரோட்டை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!