Load Image
dinamalar telegram
Advertisement

மனைவியை கொன்று ஏரியில் புதைப்பு ரவுடி உள்ளிட்ட 3 பேர் சிறையில் அடைப்பு

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி-நடத்தையில் சந்கேப்பட்டு மனைவியை கொலை செய்து, ஏரியில் புதைத்த ரவுடி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை, அனிதா நகரை சேர்ந்தவர் பாஸ்கர்,48; பிரபல ரவுடி. இவர், சமீபத்தில் உழந்தை ஏரியில் புதைத்த சடலத்தை தோண்டி எடுத்ததாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பாஸ்கரின் கூட்டாளிகளான அனிதா நகர் தாடி வேல்முருகன் (எ) வேல்முருகன், 38; சரவணன், 32; சாரம் மனோகர், 32; ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அதில், கொலை வழக்கில் சிறையில் இருந்த பாஸ்கர், தனது மனைவி எழிலரசி நடத்தையில் சந்தேகப்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு பரோலில் வந்து கழுத்தை நெரித்து கொலை செய்து, ஏரியில் புதைத்தது தெரியவந்தது. தற்போது, அந்த பகுதியில் சுவர் கட்ட பள்ளம் தோண்டுவதால், எலும்புக்கூடு சிக்கிவிடும் என பயந்து, பள்ளம் தோண்டி சடலத்தை எடுத்து எலும்புகளை ஏரியில் வீசியது தெரிய வந்தது.

அதன்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் ரவுடி பாஸ்கரை கைது செய்தனர். அவர் எழிலரசின் எலும்பு கூட்டை வீசியதாக சுட்டிக் காட்டிய உழந்தை ஏரியில் நீச்சல் வீரர்கள் நேற்று முன்தினம் தேடினர். சில எலும்புகளும், சேலையின் ஒரு பகுதி மட்டும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார், ரவுடி பாஸ்கர், அவரது கூட்டாளிகளான வேல்முருகன், மனோகர் ஆகியோரை நேற்று கோர்ட் டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நேற்றும், உழந்தை ஏரியில் எழிலரசியின் எலும்புகளை தேடும் பணி நடைபெற்றது. ஸ்கூபா டைவிங் குழுவினர் கொண்டு மூன்று மணி நேரம் தேடினர். உடைந்த மொபைல் போன் ஒன்று மட்டுமே சிக்கியது. அது, கொலை செய்யப்பட்ட எழிலரசியுடையதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் ஏரியில் சிக்கியது எழிலரசின் எலும்புகளா என்பதை உறுதி செய்திட கோர்ட் அனுமதி பெற்று, எலும்புகளை ஹைதராபாத்தில் உள்ள டி.என்.ஏ., ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக எழிலரசியின் தங்கை வள்ளி மற்றும் பாஸ்கரின் கூட்டாளியான சரவணன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சுருட்டை செந்தில் எங்கே?

ரவுடி பாஸ்கர் சிறையில் இருந்தபோது, தனது உறவினரான சுருட்டை செந்திலை வைத்து வெளியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வந்தார்.இந்நிலையில் மனைவி எழிலரசி - சுருட்டை செந்தில் பழக்கத்தில் சந்தேகமடைந்த ரவுடி பாஸ்கர், 10 ஆண்டிற்கு முன் தனது மனைவியை கொன்று புதைத்தார். இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பாஸ்கருக்கு உதவி வந்த சுருட்டை செந்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மாயமானது தெரிய வந்தது. அதனால், மாயமான செந்தில் என்ன ஆனார் என்பது குறித்து தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement