Load Image
dinamalar telegram
Advertisement

பயிற்சி ஒத்திவைப்பு; ஓட்டுச்சாவடி பணி மட்டுமே! தினமலர் செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான, குறு வள மைய பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை, 26ம் தேதியன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய, சிறப்பு முகாம், கடந்த 12, 13 தேதிகளில் நடத்தப்பட்டது. வரும் 26, 27ம் தேதிகள் வரை, இப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுச்சாவடி மைய அலுவலராக பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கல்வித்துறை சார்பில் வரும் 26ம் தேதி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சியும், நான்கு,ஐந்தாம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புக்கான பயிற்சியும் நடக்கிறது. ஒரேநாளில் இரு நிகழ்வுகள் நடப்பதால், எதற்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற குழப்பம்ஏற்பட்டது.

கல்வித்துறையில் இருந்தும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுபற்றி 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில்,'கல்வித்துறை வழங்கும் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு, ஓட்டுச்சாவடி மைய பணியில் இருந்து விலக்கு அளிக்கலாம். இல்லாவிடில் தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என, கோரிக்கை விடுத்திருந்தோம். இந்நிலையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,'என்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, ''இயக்குனரகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதனால், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, ஓட்டுச்சாவடி பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவர்,'' என்றார்.- நமது நிருபர் -


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement