Load Image
dinamalar telegram
Advertisement

வீட்டு புரோக்கராக நடித்து மோசடி: பல லட்சம் ரூபாய் சுருட்டிய இருவர் கைது

Tamil News
ADVERTISEMENT
பல்லடம்:வீட்டு புரோக்கர் என்ற பெயரில், பல்லடத்தை சேர்ந்த கும்பல் ஒன்று, பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பல்லடம் வட்டாரத்துக்கு, வேலை தேடி வரும் தொழிலாளர்கள் பலர், வாடகை, போக்கியத்துக்கு குடி பெயர்கின்றனர். அவர்களிடம், பல்லடத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, புரோக்கர் என்ற பெயரில், லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பலர் போலீசிடம் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மங்கலம் ரோட்டை சேர்ந்த சகாபுதீன் மகன் நவாஸ், 28 மற்றும் கிருஷ்ணசாமி மகன் ரங்கராஜ், 48 ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

நவாஸ், ரங்கராஜ் ஆகிய இருவரும், வீட்டு புரோக்கர் என்ற பெயரில், வீடு வாடகை, போக்கியத்துக்கு அனுகவும் என, பல்லடம் முழுவதும் விளம்பர அட்டைகள் தொங்க விட்டுள்ளனர். வீடு தேவைப்படுவோர் தொடர்பு கொண்டால், புதிதாக கட்டப்பட்ட ஒரே வீட்டை காட்டுவார்.

உரிமையாளர் என, ரங்கராஜை அறிமுகம் செய்து வைத்து, அட்வான்ஸ் தொகை வேண்டும் என வாங்கி விடுவார். பல்வேறு காரணங்களை கூறி, வீட்டை வழங்காமல் இழுத்தடிப்பார். இவ்வாறு, ஒரே வீட்டை காட்டி, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த தொகையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement