Load Image
dinamalar telegram
Advertisement

ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒருவழியா தள்ளி வச்சாச்சு!

கோவை:'தினமலர்' செய்தி எதிரொலியால், நாளை நடக்கவிருந்த குறுவள மைய பயிற்சி தள்ளிவைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம் செய்ய, சிறப்பு முகாம், நாளை மற்றும் 27ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான, வட்டார வள மைய பயிற்சியும், நாளை (நவ.,26ம் தேதி) அறிவிக்கப்பட்டிருந்தது. இரு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடந்தால், எங்கு செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நாளை நடக்கவிருந்த, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், வாக்காளர் சிறப்பு முகாமுக்கு மட்டும் ஆசிரியர்கள் சென்றால் போதும். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement