Load Image
dinamalar telegram
Advertisement

அதிக பயணிகளுடன் தனியார் பஸ் டிரைவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விழுப்புரத்தில் கலெக்டர் அதிரடி

Tamil News
ADVERTISEMENT


விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே பஸ்சில் அதிக பயணிகளை ஏற்றி, மாணவர்கள் படியில் தொங்கியபடி சென்றதால் டிரைவருக்கு, கலெக்டர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்க நேற்று காலை 9:45 மணியளவில் கலெக்டர் மோகன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக விழுப்புரத்திலிருந்து செஞ்சிக்குச் சென்ற வேலன் என்ற தனியார் பஸ்சில் அதிகளவில் கூட்டம் இருந்தது.

இதனால், கல்லுாரி மாணவர்கள் பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதனைப் பார்த்த கலெக்டர், தனியார் பஸ்சை லட்சுமிபுரத்தில் நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டு வேறு பஸ்சில் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

பின், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தி பஸ்சில் அதிகளவில் பயணிகளை ஏற்றியதற்காக டிரைவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement