Load Image
dinamalar telegram
Advertisement

மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Tamil News
ADVERTISEMENT


செஞ்சி-மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அன்று காலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், விசேஷ அர்ச்சனை நடந்தது. இரவு 11:00 மணிக்கு காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார்.

அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பூசாரிகளும், பக்தர்களும் தாலாட்டு பாடல்களைப் பாடினர்.

பூஜையில் வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணன், எஸ்.பி., ஸ்ரீநாதா, சப் கலெக்டர் கட்டா ரவிதேஜா, ஹிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் வெளியூரில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement