Load Image
dinamalar telegram
Advertisement

யூக வணிகர் தலையீடு கூடாது! காம்பாக்டிங் சங்கம் வேண்டுகோள்

திருப்பூர்:பஞ்சு வர்த்தகத்தில் யூக வணிகர்களின் தலையீட்டை தடுக்கவேண்டும் என்பது காம்பாக்டிங் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பூர் காம்பாக்டிங் சங்க மகாசபை கூட்டம், காந்திநகர் அரிமா சங்க அரங்கில் நடந்தது. சங்க தலைவர் துரைசாமி தலைமைவகித்தார். முன்னாள் பொருளாளர் முத்துசாமி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். புதிய பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

யூக வணிகர்கள் பஞ்சு விலையை முறைகேடாக கையாள்வதை மத்திய அரசு தடுக்கவேண்டும். இந்திய பருத்தி கழகம் மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து, நுாற்பாலை களுக்கு விற்பனை செய்யவேண்டும்.

மூலப்பொருட்களுக்குபதில், ஆயத்த ஆடை ரகங்களை ஏற்றுமதி செய்யும்போது, நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்; பொருளாதாரம் ஏற்றம்பெறும். மெட்ரோ ரயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டித்து, அருகாமை நகரங்களை இணைக்கவேண்டும்

இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம்மேற்கொள்ள தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

பைப்லைன் காஸ் திட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டும்; திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்களுக்கு, மானிய விலையில் காஸ் கிடைக்கச் செய்யவேண்டும். தொழில்நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement