ADVERTISEMENT
கோவை;அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில், தேசிய இளைஞர் பாராளுமன்ற நிகழ்வு நேற்று நடந்தது. வேந்தர் தியாகராஜன் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் கவுசல்யா, மாணவர்கள் பாராளுமன்ற செயல்பாடுகளை தெரிந்து வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பல்துறை மாணவர்கள் இணைந்து பாராளுமன்ற செயல்பாடுகளை நிகழ்த்தி காட்டினர்.
பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு சிக்கல், தொலைநோக்கு திட்டங்களின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை மாணவர்கள் முன்வைத்தனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி.,நாகராஜன், துணைவேந்தர் பாரதிஹரிசங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!