Load Image
dinamalar telegram
Advertisement

குக்கர் குண்டு சம்பவத்துக்கு இஸ்லாமிய எதிர்ப்பு கவுன்சில் பொறுப்பேற்பு!

Tamil News
ADVERTISEMENT
பெங்களூரு-மங்களூரில் ஆட்டோவில் நிகழ்ந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, இதுவரை அறியப்படாத, 'இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், தக்க பதிலடி கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பம்ப்வெல் பகுதியில், கடந்த 20ம் தேதி மாலை 4:30 மணி அளவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது.

நான்கு பேர் கைதுஇந்த சம்பவத்தில், ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஷாரிக், 27, ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், 60 ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இருவரும் மங்களூரின் பாதர் முல்லா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறுகின்றனர். சம்பவம் தொடர்பாக நேற்று வரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷாரிக்கிற்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், தமிழகத்தின் கோவையில் அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பிற்கும், இதற்கும் தொடர்பு இருப்பதும் உறுதியானது.

இந்நிலையில், இதுவரை அறியப்படாத, 'இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்' என்ற இஸ்லாமிய தற்காப்பு கவுன்சில், இம்மாதம் 23ம் தேதி குறிப்பிட்டு ஆங்கிலத்தில் அதன் இணையதளத்தில் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

போலீசார் கைது செய்துள்ள ஷாரிக் எங்கள் சகோதரர். மங்களூரின் கத்ரி கோவில் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தார். எங்கள் திட்டம் நிறைவேறவில்லை என்றாலும், பாதுகாப்பு படையினர் கண்களில் மண்ணை துாவி மீண்டும் தாக்குதல் நடத்துவோம்.

புது சட்டங்கள்எங்கள் சகோதரர் ஷாரிக் கைதால் கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமாரின் மகிழ்ச்சி குறுகிய காலத்துக்கு மட்டுமே. உங்கள் செயல்பாட்டை கூர்ந்து கவனித்து வருகிறோம். உங்களின் அடக்குமுறையை விரைவில் உங்களுக்கே திருப்பி தருவோம்.

எங்களை நசுக்கி, எங்கள் மதத்தின் மீது தலையிடுவதற்காக புது புது சட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால், எங்கள் மதத்தின் அப்பாவிகள் சிறையில் சிதைக்கப்படுகின்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுத்து தீர்த்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் பி.எப்.ஐ., உட்பட அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதையே, அறிக்கையில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

...பாக்ஸ்...

என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்புகர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மங்களூரில் நேற்று கூறுகையில், ''மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அடுத்தகட்ட விசாரணைக்காக, தேசிய புலனாய்வு அமைப்புக்கு சிபாரிசு செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள், தகவல்கள் அனைத்தும் கங்கனாடி போலீஸ் நிலையத்தில் இருந்து, என்.ஐ.ஏ.,விடம் வழங்கப்படும்,'' என்றார்....பாக்ஸ்...கோவில்களில் சோதனைமங்களூரின் கத்ரி மஞ்சுநாதேஸ்வரா கோவிலில் லட்ச தீபோற்வசம் நடந்து வருகிறது. இதை சீர்குலைக்கும் வகையில் குக்கர் குண்டு வெடிக்க செய்ய ஷாரிக் திட்டமிட்டுள்ளார். இத்துடன், குத்ரோலி கோகர்ணாதேஸ்வரா கோவில், மங்களாதேவி கோவில் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், போலீசார் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தினர்....புல் அவுட்...மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள 'இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்' அறிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும். அறிக்கையின் தன்மை உண்மையா என்பது தெரியவில்லை. சில வேளையில், விசாரணையை திசை திருப்பவும் இதுபோன்று அறிக்கை வெளியிடுவர். பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரிக்கப்படும்.- அலோக் குமார், கூடுதல் டி.ஜி.பி., சட்டம் - ஒழுங்கு, கர்நாடகா***வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement