Load Image
Advertisement

ஜி.என்., மில்ஸ் மேம்பாலம் ஜன.,14க்குள் முடிக்க இலக்கு

  ஜி.என்., மில்ஸ் மேம்பாலம் ஜன.,14க்குள் முடிக்க இலக்கு
ADVERTISEMENT
கோவை:கோவை ஜி.என்., மில்ஸ் பகுதியில் கட்டப்படும் மேம்பால பணியை, அடுத்தாண்டு ஜன., 14க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், ஜான்போஸ்கோ சர்ச்சில் துவங்கி ஜி.என்.மில்ஸ் சந்திப்பு, வெள்ளக்கிணறு பிரிவு வரை, 658 மீட்டர் நீளத்துக்கு, 14 துாண்களுடன் மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.41.88 கோடி ஒதுக்கப்பட்டது.

இப்பணி, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியதால், கட்டுமான பணி முடங்கியது.

தொற்று பரவல் கட்டுப்படுத்திய பிறகும், இந்த மேம்பால பணி மந்தமாக நடந்ததால், தேசிய நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து, விரைவுபடுத்த உத்தரவிட்டனர்.

ஆக., மாதத்துக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், பணிகள் தொய்வாகவே நடந்தன. இந்நாள் வரை துாண்கள் அமைக்கப்பட்டு ஓடுதளம் போடப்பட்டிருக்கிறது.

தற்போது இறங்கு தளம் அமைப்பதற்கான வேலைகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. அடுத்த கட்டமாக ஏறுதளம் அமைக்கப்படும்; பின், தார் சாலை போட்டு, வர்ணம் பூசி, மின் விளக்குகள் பொருத்தப்பட இருக்கின்றன என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், '2023, ஜன., 14க்குள் ஜி.என்.மில்ஸ் மேம்பால பணியை முடிக்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம். அதற்கேற்ப கூடுதல் பணியாளர்களை நியமித்து, வேகப்படுத்த ஒப்பந்த நிறுவனத்துக்கு, அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement