ராம் நகரில் இன்றும் நாளையும் வீணை கலைஞர்கள் இசைக்கச்சேரி
கோவை;கோவை ராம்நகரில், இன்றும் நாளையும் ஏழு வீணைக் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களில், பல்வேறு சபாக்களிலும், அரங்கங்களிலும் இசைக் கச்சேரிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டில், 'கோவையில் திருவையாறு' என்ற நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்துவதற்கு, பல்வேறு அமைப்புகளும் கூட்டு முயற்சி செய்து வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, கார்த்திகை மாதத்திலேயே, நகரின் பல்வேறு கோவில்களிலும் இசை நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஏழு வீணை கலைஞர்கள் பங்கேற்கும் இசைக்கச்சேரி, கோவை ராம்நகரில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. டாக்டர் ஷோபனா சுவாமிநாதன் தலைமையில் நடக்கும் இந்த கச்சேரி, இன்று மாலை 6:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை, ராம்நகர் ஸ்ரீஐயப்ப பூஜா சங்கத்திலும், நாளை அதே நேரத்தில், ராம்நகர் ராமர் கோவிலிலும் நடக்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், இசை ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்குமாறு, ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!