Load Image
dinamalar telegram
Advertisement

190 வீரர், வீராங்கனையருக்குரூ.4.5 கோடி ஊக்கத் தொகை

Tamil News
ADVERTISEMENT
சென்னை:தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர் வீராங்கனையருக்குமுதல்வர் ஸ்டாலின் ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்தினார்.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனையருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் 190 பேருக்கு 4.85 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:

சமீபத்தில் நடந்த 36வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 380 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 180 வீரர்கள் வெற்றி பெற்றனர்.

இதன்படி 25 தங்கம் 22 வெள்ளி 28 வெண்கல பதக்கங்கள் பெறப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு 4.85 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள விளையாட்டு வீரர்களை அழைத்து விரைவில்மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement