Load Image
dinamalar telegram
Advertisement

வசதி குறைந்த கட்டடத்தில் செயல்படும் ஊராட்சி அலுவலகம்

அவிநாசி:வசதி குறைந்த கருவலுார் ஊராட்சி அலுவலகத்துக்கு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவிநாசி -- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கருவலுார் ஊராட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. 7,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும், ஊராட்சி அலுவலகத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. கட்டடத்திற்குள் போதிய இட வசதி இல்லாததால், வெளியில் இருக்கை போட்டு அமர்ந்தே பல நேரங்களில், மக்கள் தங்கள் குறைகளை பேச வேண்டிய நிலையும் உள்ளது.

இந்த ஊராட்சி அலுவலக கட்டடம் வசதி குறைந்து, பொலிவிழந்து இருப்பதால், இட வசதியுடன் கூடிய கட்டடம் கட்ட வேண்டும். நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கு, முதலில், பணி செய்யும் இடம், வசதி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற நிலையில், ஊராட்சி அலுவலகத்தை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement