ADVERTISEMENT
தொண்டாமுத்தூர்:புதுப்பாளையம் அடுத்த கீழ்சித்திரைச்சாவடி வாய்க்காலின் அருகில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், இருந்த தனியார் ஆக்கிரமிப்பை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
புதுப்பாளையம் அடுத்த கீழ்சித்திரைச்சாவடி வாய்க்காலின் அருகில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தை, தனியார் ஆக்கிரமித்து, வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த, 4 மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறையினர், அவ்விடத்தை சர்வே செய்து, எல்லைக்கல் நட்டு, ஆக்கிரமித்திருந்த தனியாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 16ம் தேதி, ஆக்கிரமிப்புகள் அகற்ற, பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆக்கிரமித்திருந்த தனியார், கால அவகாசம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற, தனியாருக்கு 5 நாள் அவகாசம் அளித்து கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த, 21ம் தேதி, ஆக்கிரமித்த இடத்துக்கு பதிலாக வேறு இடத்தை, பொதுப்பணித்துறையினருக்கு அளிப்பதாகக்கூறி, மாவட்ட கலெக்டருக்கு தனியார் விண்ணப்பித்திருந்தனர்.
இதை ஏற்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களை, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 54 சென்ட் இடம் மீட்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!