Load Image
dinamalar telegram
Advertisement

நீலகிரியில் அன்னிய மரங்கள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை:நீலகிரி மாவட்டத்தில், அடையாளம் காணப்பட்ட 191 இடங்களில் உள்ள அன்னிய மரங்களை முழுமையாக அகற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப் பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.

நீலகிரி மாவட்டத்தில், 191 இடங்களில் அன்னிய மரங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அதில், 53 இடங்களில் அகற்றுவதற்கு 'டெண்டர்' கோரப்பட்டுள்ளதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 16 இடங்களில் இருந்த அன்னிய மரங்களை அகற்றி, விற்றதன் வாயிலாக 4.02 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் உள்ள அன்னிய மரங்களை அடையாளம் காணும் பணியை, 15 நாட்களில் முடித்து, அவற்றை அகற்ற நான்கு வாரங்களில் டெண்டர் கோரும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மசினகுடி, முதுமலை பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான டெண்டரை இறுதி செய்து, மரங்களை அகற்றும் பணியை துவங்கும்படி, தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். டிசம்பர் 22ல் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement