Load Image
dinamalar telegram
Advertisement

விமானத்தில் பயணி உயிரை காப்பாற்றிய பெண் டாக்டர் 

Tamil News
ADVERTISEMENT


தட்சிண கன்னடா,-துபாயில் வந்த விமானத்தில் உயிருக்கு போராடிய பயணியின் உயிரை, பெண் டாக்டர் காப்பாற்றினார்.

துபாயில் இருந்து நேற்று முன்தினம் தட்சிண கன்னடா, மங்களூருக்கு விமானம் வந்து கொண்டிருந்து.

அப்போது 40 வயது பயணி ஒருவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. எனவே ஊழியர்கள், விமானத்தில் யாராவது டாக்டர்கள் இருக்கிறீர்களா என கேட்டனர்.

இதை பார்த்த, அதே விமானத்தில் பயணம் செய்த மங்களூரு குலசேகராவை சேர்ந்த டாக்டர் தாஜயேஷ் பாத்திமா, 42 என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரது உயிரை காப்பாற்றினார்.

விமானம் தரையிறங்கியவுடன் பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


வாசகர் கருத்து (1)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    முன்பு ரயில் விமான பயணங்களில் முன்பதிவு படிவங்களில் மருத்துவரா என்பதை பற்றிய விவரத்தை கேட்பார்கள் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement