மடத்தில் பதுக்கிய சிலைகள் மீட்பு
சென்னை:கும்பகோணத்தில், 'மவுனசாமி' மடத்தில் பதுக்கி இருந்த நடராஜர் உட்பட, நான்கு உலோகச் சிலைகள் மற்றும் தஞ்சாவூர் ஓவியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மவுனசாமி மடம் உள்ளது. அங்கு சட்ட விரோதமாக, பழங்கால சிலைகள் மற்றும் கலை நயமிக்க பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.
ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, தனிப்படை போலீசார், மவுனசாமி மடத்தில் சோதனை செய்தனர்.
அங்கு, சட்ட விரோதமாக பழங்கால நடராஜர், சிவகாமி தேவி, திருவாச்சியுடன் விநாயகர், பால தண்டாயுதபாணி ஆகியோரின் உலோகச் சிலைகள் மற்றும் தஞ்சாவூர் ஓவியம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இவற்றை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சிலைகள், ஓவியம், எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டதுஎன்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!