Load Image
Advertisement

மாநில கேரம் போட்டி பங்கேற்க விருப்பமா?

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில், மாவட்ட கேரம் போட்டி, மாவட்ட அணி வீரர், வீராங்கனை தேர்வு, ெஷரீப் காலனி, கிட்ஸ்கிளப் பள்ளியில் வரும், 27 ம் தேதி நடக்கிறது.

இப்போட்டியில் பனிரெண்டு வயது வரையிலானவர் சப்-ஜூனியர் பிரிவிலும், 18 வயது வரையில் ஜூனியர் பிரிவில், பொது பிரிவில் சீனியர்களும் பங்கேற்கலாம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொது பிரிவில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானலும் (இரு பாலரும்) பங்கேற்கலாம். வயது தடையல்ல.

இப்போட்டியில் திறமை காட்டி வெற்றி பெறுபவர்கள் மாவட்ட கேரம் அசோசியேஷன் மூலம், மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். கூடுதல் தகவல்களுக்கு, 96777 04053 என்ற எண்ணில் அழைக்கலாம் என, மாவட்ட கேரம் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சதுரங்க போட்டி

திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன், மணி செஸ் பவுண்டேசன் சார்பில், மாநில சதுரங்க போட்டி வரும், 27ம் தேதி ஏஞ்சல் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது. ஒன்பது, 12, 15 வயது பிரிவு மாணவ, மாணவியர் மற்றும் பொதுபிரிவில் (அனைவரும்) பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் chessfee.com என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம். கூடுதல், விபரங்களுக்கு, 98436 98674 என்ற எண்ணில் அழைக்கலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement