Load Image
dinamalar telegram
Advertisement

மாநில நீச்சல் போட்டிக்கு பிரன்ட்லைன் மாணவர் தகுதி

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்:பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட நீச்சல் போட்டி, திருப்பூர், ஏ.பி.எஸ்., அகாடமியில் நடந்தது.

குறுமைய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியை சேர்ந்த, கேசவ தர்ஷன், முகிலேஷ், பிரனேஷ், மேகதர்ஷன் ஆகியோர் மிட் ரிலே போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாணவியர் பிரிவில், மஹிதா, தர்ஷினி, நித்யஸ்ரீ, தேவதர்ஷிகா குழு முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சியாளர் மாடசாமியை, பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன், பள்ளி முதல்வர் வசந்தராஜ் உட்பட பலர் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement