Load Image
dinamalar telegram
Advertisement

உல்லாசமாக இருந்தபோது மாரடைப்பு முதியவர் மர்மச்சாவில் திடீர்  திருப்பம்



ஜெ.பி.நகர்-சாலையோரம் போர்வை, பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த முதியவரின் கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பெங்களூரு ஜெ.பி.நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 67. டிரால்வல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது இதை மகன் கவனிக்கிறார். கடந்த 16ம் தேதி பேரனை பேட்மின்டன் வகுப்பில் விட்டு வர சென்றார்.

மாலை 4:55 மணி அளவில் மருமகளுக்கு போன் செய்து, 'எனக்கு அவசர வேலை இருக்கிறது. உன் மகனை நீயே வந்து அழைத்து செல்' எனக் கூறி சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.

இதனால் மகன் ஜே.பி., நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தேடி வந்த நிலையில், மறு நாள் காலை ஜெ.பி.நகர், ஆறாவது பிளாக்கில், முதியவர் பாலசுப்பிரமணியன் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

உடலில் எந்தவிதமான காயமும் இல்லை. போர்வை, பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்ட நிலையில் உடல் இருந்தது.

போலீசார் விசாரணையில், முதியவருடன் கடைசியாக பெண் ஒருவர் பல முறை தொடர்ந்து மொபைல் போனில் பேசியிருப்பது தெரிந்தது. பெண்ணின் மொபைல் அலைவரிசை கடைசியாக 'சாரக்கி' சிக்னல் என்ற இடத்தை காட்டியது.

அப்பகுதியில் வசித்த பாலசுப்பிரமணியனின் வீட்டு வேலைக்காரி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் அவர் கூறியதாவது:

கடந்த 16ம் தேதி மாலை எங்கள் வீட்டுக்கு வந்தார். என்னுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.

இதனால் கொலை வழக்கில் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில், என் கணவரிடம் தகவல் தெரிவித்தேன்.

பின், வீட்டுக்கு வந்த என் கணவர், சகோதரன் ஆகிய இருவரும் சேர்ந்து உடலை பிளாஸ்டிக் பையால் சுற்றி, சாலையோரம் கொண்டு சென்று வைத்து விட்டு வந்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement