மஹாராஷ்டிரா முதல்வர் கருத்து சர்வகட்சி கூட்டத்தில் முடிவு
பெங்களூரு-''எல்லை பிரச்னைகளை, சமாதான பேச்சு நடத்தி சரி செய்து கொள்ள வேண்டும் என, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியது பற்றி, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்வோம்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரின், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், நேற்று முதல்வர் கூறியதாவது:
கர்நாடக - மஹாராஷ்டிரா எல்லை விவாதத்தை, பேச்சு நடத்தி தீர்த்து கொள்ளலாம் என, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதை நானும் கவனித்தேன். இது பற்றி வரும் வாரம், அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, முடிவு செய்வோம்.
மஹாராஷ்டிர அரசே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து, திறமையாக வாதிட நாமும் தயாராக இருக்கிறோம். இதற்கிடையில் ஏக்நாத் ஷிண்டே இதுபோன்று பேசியுள்ளார்.
தற்போதைக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவதே, நமது அரசின் நோக்கம். மஹாராஷ்டிராவின், ஜெத் தாலுகாவை, கர்நாடகாவில் சேர்ப்பது என, இந்த தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகள் முடிவு செய்துள்ளன. இது பற்றியும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!