Load Image
dinamalar telegram
Advertisement

ஹெஸ்காம் அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தாவில் புகார்

Tamil News
ADVERTISEMENT


தார்வாட்,-'ஹெஸ்காம் அதிகாரிகள் 25 சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்டு வெளிமாநிலத்தவருக்கு பணிகளை அளிக்கின்றனர்' என, லோக் ஆயுக்தாவில் ஒப்பந்ததாரர்கள் நேற்று புகார் செய்தனர்.

கர்நாடக அரசு வளர்ச்சி பணிகளுக்கான பில்களை விடுவிக்க, 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக மாநில ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், தார்வாட் ஹெஸ்காம் அதிகாரிகள் பணிகளை ஒதுக்க, 25 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர், என ஹெஸ்காம் ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொட்பாக, ஹெஸ்காம் பொது மேலாளர் பாரதி, தொழில்நுட்ப இயக்குனர் ஸ்ரீகாந்த் மீது லோக்ஆயுக்தாவில் நேற்று புகார் அளித்தனர்.

பின், ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:

ஹெஸ்காம் அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு பணிகளை அளிக்க, 25 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர்.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு 472 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை, வெளிமாநில ஒப்பந்ததாரருக்கு அளித்துள்ளனர்.

இதை கர்நாடக ஒப்பந்ததாரருக்கு டெண்டர் அளித்திருந்தால், 3,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.

அதை விட்டுவிட்டு, கமிஷன் ஆசைக்காக வெறும் 40 ஒப்பந்ததாரருக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளோம்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுத உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement